‘மேற்கு மனிதன்’ கவிதை நூல்
ஆக்கியோன்:
எஸ். ஹுஸைன் மௌலானா
எஸ். ஹுஸைன் மௌலானா
பதிப்பகம் :
மிலேனியம் கல்வி ஸ்தாபனம், கொழும்பு
மிலேனியம் கல்வி ஸ்தாபனம், கொழும்பு
தொடர்பு :
20/5 பி, 10ஆவது ஒழுங்கை, கொழும்பு 03
உரைநடையில் எந்தவொரு கருத்தினையும் மிக இலகுவில் வெளிக்கொணரலாம். ஆனால் கவிதையில் ஆழமான, தத்துவார்த்தமான கருத்துக்களை வெளியிடுவதென்பது மிகக் கடினமான காரியம். நூலாசிரியர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள தமது ஆழ்ந்த பற்றினை வாசிப்பின் தேடல் மூலம் உள்வாங்கி கவிதையாய் வெளிக்கொணர்ந்துள்ளார்.’ என்கிறார் பதிப்பாசிரியர் திக்குவல்லை ஸப்வான்.
கொழும்பு மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் 07 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. ‘மேற்கு மனிதன்’ எனும் கவிதை நூல். மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் தலைவராகவிருந்து அதனை வழிநடத்திச் செல்லும் சிந்தனாவாதி எஸ். ஹுஸைன் மௌலானாவே இந்நூலின் சிற்பி. ஏற்கனவே பல உரைநடை நூல்களைத் தந்த அவரின் முதல் கவிதா முயற்சி ‘மேற்கு மனிதன்’ என்பது குறிப்பிடத்தக்கது.