It

சனி, 22 செப்டம்பர், 2012

அழகு செய்த ஓவியமே - கவிதை ஒரு பார்வை


இன்று பார்வையில் பட்ட தவா பரமேஸின் “அழகு செய்த ஓவியமே” பற்றி....

//புத்தகமும் திறந்தால் தான்

புதைந்துள்ள பாடம் தெரியும்

சித்திரமாய் நீயிருந்தால்

சிந்தைக்கு என்ன விளங்கும்


அழகு செய்த ஒவியமே-நான்

ஆசையால் வாசிக்கும் காவியமே

களவு கொண்ட என் இதயத்தை

உன்

கண் திறந்து தருவாயா?


கண்திறக்கா கடவுளாக

காலம் முழுதுமிருந்து-என்னை

காதல் கரையேற்றாமல் விடுவாயா?


இமை திறக்காத பொற்சிலையே

இதழ் திறந்தாவது

ஒரு வார்த்தை சொல்

என்னிலமைக்கு அர்தம் சேர்//

இந்தக் கவிதை ஒரு தலைமகன் (காதலன்) தலைமகள் மீது கொண்டிருக்கின்ற ஒருதலைக் காமத்தைக் குறிப்பிடுகிறது. புத்தகமாய் அவளைச் சொல்கிறான் கவிஞன். புத்தகத்துப் பக்கங்களைத் திறக்கும் போது படங்கள் தெரிவதைப் போல், அவளும் தன் இதயப் புத்தகத்தி்ல் இருப்பதாகச் சொல்கிறான்  கவிஞன். 
இதில் கையாளப்பட்டுள்ள ஓவியம் - காவியம் போன்ற சொற்கள் நயம்மிக்கனவாய்க் கையாளப்பட்டுள்ளன.

விசேடமாகச் சொல்லவேண்டியது யாதெனின், இவரது கவிதைகளில் எல்லாம் (இருவரிகளில் முதலெழுத்து) புதுக்கவிதையானபோதும், மோனை கையாளப்பட்டிருக்கின்றன. இங்கும் அந்தச் சாயலைக் காணக்கூடியதாகவுள்ளது.
கடைசியாகவுள்ள “இமை திறக்காத பொற்சிலையிடம் கேட்கும் கேள்வி... இளைமைக்கு அர்த்தம் சேர் என்பது...” அவன் இளமை அவளால் தோய்ந்து போவது போலும் கவிதையை அழகாய் வார்த்திருக்கிறார்.

ஒன்று....

நல்ல கவிதைகளைத் தரும் தேவா பிரேம்ஸ் தமிழ் எழுத்துக்களில் பிழை ஏற்படாமல் கவனித்தால் மேலும் சிறப்புப் பெறும். (தட்டச்சுப் பிழைகளாக வருபவற்றை ஏற்கலாம். ஆயின், எழுத்து சொல் மயக்கம் வராமல் பார்த்துக்கொள்வது சிறந்ததுதானே!)
மேலும் மேலும் சிறந்த கவிதைகளை தேவா பிரேம்ஸிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
அவரது பார்வைக்கான இணையத்தள முகவரி http://www.paarvaiyil.com/
வாழ்க நற்றமிழ்
தமிழன்புடன்
-கலைமகன் பைரூஸ்