It

புதன், 1 ஆகஸ்ட், 2012

நம்பிக்கை தரும் தமிழ்சினிமா







உலக சினிமாக்கள் மனித இயல் கூறுகளை கேமராவின் கோணங்களுக் குள் சிறைப்படுத்தி விடுவதால் பார் வையாளனின் அக உணர்வுகளோடு பேசும் தன்மை கொண்டு விளங்கு கின்றன. இத்தகைய சினிமாக்கள் எதிர் விமர்சனங்களை விட்டும் வெகு தூரத் திலும், விருதுகளுக்கு சமீபமாக வும் இருப்பதென்பது அதிகதிகமான பார்வை யாளன் மனதில் சினிமா மீதான புரி தலையும், நம்பிக்கையையும் வி தைக் க வழிவகை செய்கின்றன. இவ் வு லக சினிமாக்கள் மனித வாழ்வு, கலாசாரம், பண்பாடு போன்றனவற்றை அடையா ளப்படுத்துவதோடு மாத்திரமின்றி நல்ல பல விடயங்களைப்பற்றி கற்பித்துக் கொடுக்கவும், விழிப்புணர்வை உண்டாக்கவும் தவறுவதில்லை. கொரியா சினிமாக்களில் பௌத்த சூத்திரங்களை ஆராய்கிறார்கள். சீன சினிமாக்களில் கன்பூசியஸ் தியரி சொல்லப்படுகிறது. ஈரானின் சினிமாக்கள் உலக அரங்கில் முன்னனியில் நிற்கின்றன. இதில் குர்ஆன் கூறுகின்ற உலக தர்மங்கள் பேசப்படுகின்றன. இவ்வாறாக சினிமாக்கள் அமைகின்றபோது இவ்வகைச் சினிமாக்கள் காலத்தின் தேவையாகவும், சமூகத்தின் அங்க மாகவும் முன்னிருத்தப்படுகின்றன.

திங்கள், 30 ஜூலை, 2012

பன்முக எழுத்தாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனின் நேர்காணலில் கேட்டவை

இன்று திங்கட்கிழமை  (30.07.2012 திங்கட் கிழமை) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சி “ரமழான் வசந்தம்“ நிகழ்ச்சியில் பல்துறை ஆளுமைமிக்க அஷ்ரப் ஷிஹாப்தீனின் நேர்காணல் நேரலையாக இடம்பெற்றது.

நம்நாட்டுப் பிரபல கவிஞர்களில் ஒருவரும், எழுத்தாளரும், முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் சேவையில் பல நிகழ்ச்சிகளைச் செய்து நேயர்கள் அநேகரின் அடிமனதில் ஆழப்பதிந்திருப்பவரும்தான் அல்ஹாஜ் அஷ்ரப் ஷிஹாப்தீன். அவர் பற்றி பல்லாயிரம் பேரும் அறிந்திருப்பதால் அவர்பற்றிய மேலதிக தகவல்களை விடுத்து தலைப்புக்கு வருகின்றேன்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

விமர்சனம் விரைவில்...... (எதிர்பாருங்கள்)

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

யாத்ரா 20

==யாத்ரா கிடைக்குமிடங்கள்== இஸ்லாமிக் புக் ஹவுஸ் 77, ஸ்ரீ வஜிரஞான மாவத்தை, தெமட்டகொட ரோட், கொழும்பு - 09 தொலைபேசி 2684851, 2669197 பூபாலசிங்கம் புத்தகசாலை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 2422341, 2435713 இன்போடெக் சிஸ்டம் எம்.பி.சி.எஸ் வீதி ஓட்டமாவடி 065 2258260, 077 4638299 லக்கி புக்ஸ் 5ஃ2 கெலிஓய ஷொப்பிங் கொம்ப்ளக்ஸ் தவுலகல ரோட், கெலிஓய 077 2392924 ஆட்ஸன் கிரியேஷன்ஸ் 252 சீ 2, மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகம. 0414 917101 - 0777 432987

சனி, 20 ஆகஸ்ட், 2011

நீங்கள் நலமாக…


‘ஓடி விளையாடு பாப்பா…’ இப்படிச் சொன்னான் பாரதி. இந்தக் கவிவரிகள் சொல்வதென்ன? ஒருவன் எத்தகைய செல்வங்களைப் பெற்றிடினும் தேகா ரோக்கியம் இல்லையேல் அவன் முதுகுடைந்தவனாகவே கணிக்கப் படுகின்றான். அது ஒருபுறமிருக்க மனித வளர்ச்சிப்படியின் ஆரம்ப நோக்க மே நலம்தான்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

யாத்ரா


யாத்ரா'
ஆசிரியர்:
கவிஞர். அஷ்ரப் சிஹாப்தீன்
தொடர்பு :
‘யாத்ரா 37, தன்கனந்த வீதி, மாபோலை, வத்தளை.

ஈழத்து இலக்கியத்தில் கவிதைகள் தனியிடம் பிடிக்கின்றன. 1970களின் முன்னர் அதிகளவில் மரபுக் கவிதைகளையே ஈழத்துக் கவிஞர்கள் எழுதிவந்தனர். பத்திரிகைகளும் மரபுக் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து அவற்றைப் பிரசுரித்து வந்தன. அக்கால கட்டத்தின் பின்னர் புதுக்கவிதைத் தாக்கம் மிகுதியாகவும் இலக்கியத்தினுள் புகுந்துகொண்டது. எண்பதுகளின் பிற்பகுதியில் புதுக்கவிதை எழுதுபவர்கள் அதிகரித்தனர்.

புதன், 1 டிசம்பர், 2010

‘மேற்கு மனிதன்’ கவிதை நூல் ஒரு நோக்கு


மேற்கு மனிதன் கவிதை நூல்
ஆக்கியோன்:
எஸ். ஹுஸைன் மௌலானா
பதிப்பகம் :
மிலேனியம் கல்வி ஸ்தாபனம், கொழும்பு
தொடர்பு :
20/5 பி, 10ஆவது ஒழுங்கை, கொழும்பு 03

ரைநடையில் எந்தவொரு கருத்தினையும் மிக இலகுவில் வெளிக்கொணரலாம். ஆனால் கவிதையில் ஆழமான, தத்துவார்த்தமான கருத்துக்களை வெளியிடுவதென்பது மிகக் கடினமான காரியம். நூலாசிரியர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள தமது ஆழ்ந்த பற்றினை வாசிப்பின் தேடல் மூலம் உள்வாங்கி கவிதையாய் வெளிக்கொணர்ந்துள்ளார். என்கிறார் பதிப்பாசிரியர் திக்குவல்லை ஸப்வான்.
கொழும்பு மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் 07 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. மேற்கு மனிதன் எனும் கவிதை நூல்.           மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் தலைவராகவிருந்து அதனை வழிநடத்திச் செல்லும் சிந்தனாவாதி எஸ். ஹுஸைன் மௌலானாவே இந்நூலின் சிற்பி. ஏற்கனவே பல உரைநடை நூல்களைத் தந்த அவரின் முதல் கவிதா முயற்சி மேற்கு மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.