It
விமர்சனம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 செப்டம்பர், 2010

ஒரே இரத்தம்

திக்குவல்லை ஸப்வானின் ஒரே இரத்தம் - நூல் விமர்சனம்

கொழும்பு 6 மீரா பதிப்பகத்தாரின் 73 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. "ஒரே இரத்தம்' மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு. ஏலவே தனக்கே உரித்தான பாணியில், தென்பகுதி மண் வாசனை கமழ, நல்ல தமிழில் "உம்மாவுக்கொரு சேலை' யைத் தந்த பிரபல சிறுகதையாசிரியர் திக்குவல்லை ஸப்வான்தான் இந்த மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தவர். இது மொழிபெயர்ப்பாசிரியரின் முதல் மொழிபெயர்ப்பு நூல், அவரால் தினகரன் வாரமஞ்சரி, மல்லிகை இதழ்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் இருபது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் "ஒரே இரத்தம்' என்ற மகுடந்தாங்கி வெளிவந்துள்ளது.