==யாத்ரா கிடைக்குமிடங்கள்==
இஸ்லாமிக் புக் ஹவுஸ்
77, ஸ்ரீ வஜிரஞான மாவத்தை,
தெமட்டகொட ரோட், கொழும்பு - 09
தொலைபேசி 2684851, 2669197
பூபாலசிங்கம் புத்தகசாலை
202, செட்டியார் தெரு,
கொழும்பு - 11
2422341, 2435713
இன்போடெக் சிஸ்டம்
எம்.பி.சி.எஸ் வீதி
ஓட்டமாவடி
065 2258260, 077 4638299
லக்கி புக்ஸ்
5ஃ2 கெலிஓய ஷொப்பிங் கொம்ப்ளக்ஸ்
தவுலகல ரோட்,
கெலிஓய
077 2392924
ஆட்ஸன் கிரியேஷன்ஸ்
252 சீ 2, மதுராப்புர,
தெனிப்பிட்டிய, வெலிகம.
0414 917101 - 0777 432987
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
சனி, 20 ஆகஸ்ட், 2011
புதன், 3 ஆகஸ்ட், 2011
யாத்ரா
‘யாத்ரா'
ஆசிரியர்:
கவிஞர். அஷ்ரப் சிஹாப்தீன்
தொடர்பு :
‘யாத்ரா’ 37, தன்கனந்த வீதி, மாபோலை, வத்தளை.
ஈழத்து இலக்கியத்தில் கவிதைகள் தனியிடம் பிடிக்கின்றன. 1970களின் முன்னர் அதிகளவில் மரபுக் கவிதைகளையே ஈழத்துக் கவிஞர்கள் எழுதிவந்தனர். பத்திரிகைகளும் மரபுக் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து அவற்றைப் பிரசுரித்து வந்தன. அக்கால கட்டத்தின் பின்னர் புதுக்கவிதைத் தாக்கம் மிகுதியாகவும் இலக்கியத்தினுள் புகுந்துகொண்டது. எண்பதுகளின் பிற்பகுதியில் புதுக்கவிதை எழுதுபவர்கள் அதிகரித்தனர்.
புதன், 1 டிசம்பர், 2010
‘மேற்கு மனிதன்’ கவிதை நூல் ஒரு நோக்கு
‘மேற்கு மனிதன்’ கவிதை நூல்
ஆக்கியோன்:
எஸ். ஹுஸைன் மௌலானா
எஸ். ஹுஸைன் மௌலானா
பதிப்பகம் :
மிலேனியம் கல்வி ஸ்தாபனம், கொழும்பு
மிலேனியம் கல்வி ஸ்தாபனம், கொழும்பு
தொடர்பு :
20/5 பி, 10ஆவது ஒழுங்கை, கொழும்பு 03
உரைநடையில் எந்தவொரு கருத்தினையும் மிக இலகுவில் வெளிக்கொணரலாம். ஆனால் கவிதையில் ஆழமான, தத்துவார்த்தமான கருத்துக்களை வெளியிடுவதென்பது மிகக் கடினமான காரியம். நூலாசிரியர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள தமது ஆழ்ந்த பற்றினை வாசிப்பின் தேடல் மூலம் உள்வாங்கி கவிதையாய் வெளிக்கொணர்ந்துள்ளார்.’ என்கிறார் பதிப்பாசிரியர் திக்குவல்லை ஸப்வான்.
கொழும்பு மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் 07 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. ‘மேற்கு மனிதன்’ எனும் கவிதை நூல். மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் தலைவராகவிருந்து அதனை வழிநடத்திச் செல்லும் சிந்தனாவாதி எஸ். ஹுஸைன் மௌலானாவே இந்நூலின் சிற்பி. ஏற்கனவே பல உரைநடை நூல்களைத் தந்த அவரின் முதல் கவிதா முயற்சி ‘மேற்கு மனிதன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள், 13 செப்டம்பர், 2010
ஒரே இரத்தம்
திக்குவல்லை ஸப்வானின் ஒரே இரத்தம் - நூல் விமர்சனம்
கொழும்பு 6 மீரா பதிப்பகத்தாரின் 73 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. "ஒரே இரத்தம்' மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு. ஏலவே தனக்கே உரித்தான பாணியில், தென்பகுதி மண் வாசனை கமழ, நல்ல தமிழில் "உம்மாவுக்கொரு சேலை' யைத் தந்த பிரபல சிறுகதையாசிரியர் திக்குவல்லை ஸப்வான்தான் இந்த மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தவர். இது மொழிபெயர்ப்பாசிரியரின் முதல் மொழிபெயர்ப்பு நூல், அவரால் தினகரன் வாரமஞ்சரி, மல்லிகை இதழ்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் இருபது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் "ஒரே இரத்தம்' என்ற மகுடந்தாங்கி வெளிவந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)