சனி, 20 ஆகஸ்ட், 2011

நீங்கள் நலமாக…


‘ஓடி விளையாடு பாப்பா…’ இப்படிச் சொன்னான் பாரதி. இந்தக் கவிவரிகள் சொல்வதென்ன? ஒருவன் எத்தகைய செல்வங்களைப் பெற்றிடினும் தேகா ரோக்கியம் இல்லையேல் அவன் முதுகுடைந்தவனாகவே கணிக்கப் படுகின்றான். அது ஒருபுறமிருக்க மனித வளர்ச்சிப்படியின் ஆரம்ப நோக்க மே நலம்தான்.

தேகாரோக்கியம் கருதி வாரத்திற்கொருமுறை, மாதமொரு முறை என்று மருத்துவர்களை நாடித் தமது நலம் பற்றிக் கண்ணுங் கருத்துமாக இருக்கின்றோம். இந்தவகையில் மனித வாழ்வில் இரண்டரக் கலந்தது மருத்துவம்.

மனிதன் ஆரம்ப காலத்தில் கைவைத்திய முறையினால் தனது நோய் களுக்கு நிவாரணம் கண்டான். இன்று மருத்துவத்துறை மிக்க முன்னேறி உச்சாணிக் கொம்பரில் இருப்பதை அவதானிக்கின்றோம். மருத்துவவியல் சம்பந்தமான பல நூல்கள் ஏனைய மொழிகள் பலவற்றில் நாள்தோறும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. ஆயினும் தமிழ்மொழியில் கணிசமான அளவு நூல்கள் வெளிவராமை குறையே. அதுவும் ஈழ நாட்டில் இத்தகைய நூல்கள் வெளிவந்துள்ளனவா என நோக்குமிடத்து ஆங்காங்கே விரல் விட்டெண்ணக் கூடியதாகவே இருக்கும்.

டாக்டர் எம்.கே. முருகானந்தம் அவர்கள் எழுத்துத் துறையில் மிக்க பரிச் சயமுடையவர். தமது பால்ய வயதிலேயே இலக்கியத் துறையில் காலடி பதித்தவர். இதுதவிர வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மருத்துவம் சார் விளக்கங்களைத் தொடராக நேயர்களுக்கு வழங்கி வருபவர். அரச மருத்துவராகவும், குடும்ப மருத்துவராகவும் பல்லாண்டுகள் சேவையாற்றி மிக்க அனுபவமுடையவர். ஈழத்தில் மருத்துவவியல் நூல்கள் வெளிவரு வது அரிதென்பதை உணர்ந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு ~நீங்கள் நலமாக..|  என்ற நலவியல் நூலைத் தந்திருக்கின்றார்.

கொழும்பு மீரா பதிப்பகத்தாரின் பிரசுரமாக 146 (9)  பக்கங்களில் இரண்டா வது பதிப்பாக வெளிவந்துள்ள ~நீங்கள் நலமாக| நலவியல் நூலுக்கு, இலங்கை தேசிய வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் திரு. மு. கணேசரத்தினம் வாழ்த்துரையும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் திரு. வி.என். மதியழகன் அணிந்துரையும் வழங் கியுள்ளனர்.

தொடர்பு சாதனங்கள் ஊடாக நேயர்களின் - வாசகர்களின் கேள்விகளுக்கு டாக்டர் கொடுத்த விடைகளின் தொகுப்புத்தான் இந்நூல். இலகு தமிழில் சாதாரண அறிவுள்ளவர்களுக்காக எழுதப்பட்டுள்ள இந்நூல், வாசகசாலை களில் கட்டாயம் களமேறவேண்டியது. இந்நூல் வைத்திய மாணாக்கர்கட் கும், வைத்தியர்களுக்கும்கூட மிக்க பயனளிக்கும் என்பதில் எவ்வித சந் தேகமுமில்லை.

முன்னட்டை கண்ணைக்கவரும் வண்ணம் அழகாய் வடிவமைக்கப்பட்டுள் ளது. கட்டுரைகளுக்கிடைக்கிடையே ~தப்பண்ணாவும் ஞானக்கிளியும்| ஆங் காங்கே காணப்படுகிறது. புhரிய பல சிக்கல்களை மிகவும் ஆழமாக அவை விளக்குகின்றன. சிறுவர்கள், வாலிபர்கள், இளம்பெண்கள், யுவதிகள் என்று பலதரப்பினருக்கும் பயன்படக்கூடியதே 'நீங்கள் நலமாக…' நலவியல் நூல்.

இந்நூலின் முதற்பதிப்பைப் பற்றி பேராசிரியர் சே. சிவஞானசுந்தரம் , 'நீங் கள் நலமாக…' சுகமாக அறிவுள்ளவராக வாழ இந்நூல் பெரிதும் உதவும். இதை எழுதிய டாக்டர் மருத்துவத்துறையில் பல வருட அனுபவம் மிக்க வர். இவரது அறிவுநூல் மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது.| என்றும், எழுத்தாளர் செ. யோகநாதன் 'பல தன்மையான நோயாளிகளுக்கும் பயன்த ரும் விதத்தில் டொக்டர் முருகானந்தம் மிக எளிமையாகவும், ஆழமாகவும் நலவியல் நூல்களை எழுதி வருகின்றார். இது அவரது எட்டாவது நூல்… வாசகரோடு அருகிலே இருந்து பேசுவது போலவே நூல் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஒரு சிறுகதை நூலையோ கவிதைத் தொகுப்பையோ வெளியிடுவதை விட இதுபோன்ற நூல்களை வெளியிடுவதன் மூலம் டொக்டர் முருகானந் தம் ஆற்றும் பணி பாராட்டுக்குரியது.' என்று தெளிவத்தை ஜோசப் பாராட் டியுள்ளார். புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ~இலங்கையின் இலக்கியப் பரப்பில் பேராசிரியர் நந்திக்குப் பிறகு நலவியலில் ஆழத் தடம் பதித்திருப் பவர் எம்.கே. முருகானந்தம்| என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் இக்கூற்றுக்களிலிருந்து வைத்தியர் பற்றி நாம் ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம்.

டொக்டர் எம்.கே. முருகானந்தம் எம்.பீ.பீ.எஸ்(இலங்கை) அவர்களின் 'நீங்கள் நலமாக' நூல் வாசகர்களிடத்தில் பெருவரவேற்புப் பெறும் என்பது திண் ணம்.

தொடர்ந்தும் இவ்வாறான நலவியல் நூல்களை வைத்தியரிடமிருந்து எதிர் பார்க்கின்றோம்.

டாக்டர் எம்.கே. முருகானந்தம், 348, காலி வீதி, கொழும்பு – 06

நன்றி : இடி வாரப்பத்திரிகை

1 கருத்து: