It
அஷ்ரப் ஷிஹாப்தீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஷ்ரப் ஷிஹாப்தீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஜூலை, 2012

பன்முக எழுத்தாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனின் நேர்காணலில் கேட்டவை

இன்று திங்கட்கிழமை  (30.07.2012 திங்கட் கிழமை) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சி “ரமழான் வசந்தம்“ நிகழ்ச்சியில் பல்துறை ஆளுமைமிக்க அஷ்ரப் ஷிஹாப்தீனின் நேர்காணல் நேரலையாக இடம்பெற்றது.

நம்நாட்டுப் பிரபல கவிஞர்களில் ஒருவரும், எழுத்தாளரும், முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் சேவையில் பல நிகழ்ச்சிகளைச் செய்து நேயர்கள் அநேகரின் அடிமனதில் ஆழப்பதிந்திருப்பவரும்தான் அல்ஹாஜ் அஷ்ரப் ஷிஹாப்தீன். அவர் பற்றி பல்லாயிரம் பேரும் அறிந்திருப்பதால் அவர்பற்றிய மேலதிக தகவல்களை விடுத்து தலைப்புக்கு வருகின்றேன்.